புன்னகைச் செவ்விதழில் செங்கதிர்கள் ஒன்றிடும்

அன்றலர்ந்த மலர்கள் அழகுசெய்யத் துடிக்கதடி
தென்றல் தவழுமுன் கருங்கூந்தல் தன்னில்
பொன்னெழில் கதிர்கள் சிவந்து விரிந்து
புன்னகைச் செவ்விதழில் ஒன்றிடும் காலையில்
அன்றலர்ந்த பூக்கள் அழகுசெய் யத்துடிக்கும்
தென்றல் தவழுமுன் கார்கூந்தல் தன்னிலே
புன்னகைச் செவ்விதழில் செங்கதிர்கள் ஒன்றிடும்
பொன்னெழில்கா லைப்பொழு தில்
அன்றலர்ந்த பூக்கள் அழகுசெய் யத்துடிக்கும்
தென்றல் தவழுமுன் கூந்தலில்-- மின்னிடும்
புன்னகைச் செவ்விதழில் செங்கதிர்கள் ஒன்றிடும்
பொன்னெழில்கா லைப்பொழு தில்