கருவிழி சுழல கருங்கூந்தல் காற்றிலாட

திருவீதி உலாவரும் தெய்வத்தின் தேர்போல்
கருவிழி சுழல கருங்கூந்தல் காற்றிலாட
ஒருபுன்னகை மெல்லிதழ் திறந்து மின்னிட
அருகில் வந்த ஆலயக் கோபுரமே

திருவீதி யில்வரும் தெய்வத்தின் தேர்போல்
கருவிழி ஆடிட கூந்தல் அசைய
ஒருபுன் னகைபூத்து ஓர்கோபு ரம்போல்
அருகில்நீ நின்றால் அழகு

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jul-23, 10:08 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 103

மேலே