பூவின் மகளே

பூவின் மகளே..!
××××××××××××××
இமைகள் மயிலோ
வார்த்தைகள் குயிலின் குரலோ
மாலைப் பூக்கும் மல்லிகையின் மகளோ..

நிலவின் முகமே
உதடுகள் பிறையே
சிரிப்பில் செந்தாமரை மலரே

கைகள் காற்றிசை குழலே
விரல்கள் பூசுமக்கும் காம்பே
நகங்கள் பூக்களின் இதழே

அவளின் இடை
நுண்ணிய அலையே
தேவதைப் பாதம்
தேவனவன் இணையம்...

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (2-Jul-23, 6:08 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : poovin magale
பார்வை : 201

மேலே