சொல்லிட்டாளே அவ காதலை
சொல்லாத என் மனதை
சொல்லாக நான் எடுத்து
சுவையாக தமிழ் கொடுத்து
கல்லான அவ நெஞ்சம்
கரையும் படி
கவி படிச்சேன்
கள்ளா உன் மொழியெல்லாம்
கல்லா(த) என் மனதில்
நெல்லாக முளைக்கும் என்று
நேற்று வரை நினைக்கலேனு
அவ பரிதவிச்சா
கொள்ளாத கோவம் எல்லாம்
கோதை உனக்கு ஆகாதடி
பொல்லாத இக்குணத்தை
புல்லாக நீ கருதி
புறம் தள்ளி விட்டுவிடுனு
நான் சொன்னேன்
வில்லாக விழியெடுத்து
விறுக்கென்று ஏறிட்டு
தள்ளாத வயது மட்டும்
தலைவன் மேல் நான் கொண்ட
கொள்ளாத என் காதல்
குறையாதுனு சொல்லாம சொல்லிப்புட்டா.