நாவறியும் ருசியை வயிறும் அறியா

கூலி வேலையில் குடும்பம துயரும்
காலிக் கூழதின் கலயமும் நிறையும்
செருவாம் நூறதின் சிறப்பது மாயை
ஒருநா வறிருசி கும்பிய றியுமோ...

பணக்கார செல்வந்தன் விதவிதமான ருசியுள்ள
உணவை நாவறிய தின்றாலும் அதை ஒருபோதும்
வயிறு உணர்வதில்லை. ஒரேவகை ருசியுள்ள கூழை
ஏழை உழைத்துக் குடிப்பதால் மனநிறைகொள்ள
கலையம் அட்சய பாத்திரம் போல என்றும் அந்தக் கூழே
குறையா நிறைந்துள்ளது..


குறள் வெண்பா


வயிறு அறியா வகையாம் ருசியை
அயிர்நாவும் கொள்ளும் அறி

எழுதியவர் : பழனி ராஜன் (4-Jul-23, 6:53 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 41

மேலே