இழைக்கோலம் இட்டார் போல எளிமையொடு சொன்னீர் சேதி - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் மா தேமா அரையடிக்கு)
முழுப்பாடல் பார்க்கும் முன்னால்
..முதற்சீரின் ஒழுங்கு தன்னைப்
பழங்கொண்ட சுவையைப் போலப்
..பறந்துபடுங் கருத்தை வைத்தே
இழைக்கோலம் இட்டார் போல
..எளிமையொடு சொன்னீர் சேதி;
மழைத்தூவல் போல நீவிர்
..மறைமுகமாய் வைத்த தென்னே?
- வ.க.கன்னியப்பன்

