அமெரிக்க சுதந்திர தினம்
அமெரிக்க சுதந்திர தினம்
அமெரிக்க சுதந்திர தினத்தை மக்கள் யாவரும் சேர்ந்து
ஆரவாரமாக கொண்டாடிடும் இனிய இந்நன்னாள்
இரவு நேரத்தில் உள்ள வான வேடிக்கைகளைப் பார்க்க
ஈடுபாடுடன் குழந்தைகளும் வயது முதிர்த்தவரும் ஒன்றாகி
உயர்த்த இடங்களில் அமர்ந்து அண்ணாந்து நோக்கியபடி
ஊன் வகைகளை பரப்பி வைத்து உற்சாகமாக மகிழ்வோடு
எங்கு நோக்கினும் அமெரிக்கக் கொடிகளை பறக்க வைத்து
ஏற்றிய கொடிகளை கண்டு தங்கள் மரியாதையைச் செலுத்தி
ஐம்புலனுக்கும் இன்பம் அளிக்கும் விதம் மாலை நேரத்தை
ஒன்றாக கூடி குடும்பத்தோடு மிக உல்லாசமாக கழித்து
ஓயாமல் வானில் தோன்றும் வர்ண வெடிகளைக் கண்டு
ஓங்குக எங்கள் நாடே வாழ்க சுதந்திரம் எனக் கூவியவாறு
இல்லம் செல்வர் இன்ப நினைவுகளைச் சுமந்துகொண்டே