என்னுடைய கண்மணியைக் காட்டாயோ - வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
269 – 276 வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
மாட்டாயோ, இக்காலம் வல்லோர் வலிதீர்க்க?
மீட்டாயோ, வீரம்? மெலிந்தாயோ, தோளாற்றல்?
கேட்டாயு ணர்ந்திலையோ? என்உரையும் கேளாயோ?
காட்டாயோ, என்னுடைய கண்மணியைக் காட்டாயோ? 269
- அதிகாயன் வதைப் படலம்,
யுத்த காண்டம், கம்பராமாயணம்