அனுபவம் புதுமை அவளிடங் கண்டேன் - எழுசீர் ஆசிரிய விருத்தம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் தேமா)

அனுபவம் புதுமை அவளிடங் கண்டேன்
..அரியதும் புதிரதுஞ் சொன்னாள்
அனைவரும் அறிவீர் அதனையுஞ் சொன்னாள்
..அருளெனக் கொண்டதுஞ் சொன்னாள்
இனியசொல் சொன்னாள் இன்பமுந் தந்தாள்
..இனித்திடுஞ் சேதியுஞ் சொன்னாள்
சினவுதல் இன்றிச் செப்பினாள் அவளே
..செவியினுள் செறிவுடன் இனிதே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Jul-23, 2:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே