எழுத்தில் எழுதும் புலவரே
- எழுத்தில் எழுதும் புலவரே
படிக்காசுப் புலவர் அன்றே பாடினார்
குட்டுதற்கோ பிள்ளைப்பாண் டியனிங் கில்லை
குறும்பியள வாக்காதைக் குடைந்து தோண்டி
எட்டினமட் டறு ப்பதற்கோ வில்லி யில்லை
இரண்டொன்றாய் முடித்துதலை இறங்கப் போட்டு
வெட்டுதற்கோ கவியொட்டக் கூத்தன் இல்லை
விளையாட்டாய் கவிதைதனை விரைந்து பாடி
தெட்டுதற்கோ அறிவில்லாத் துரைகள் உண்டு
தேசமெங்கும் புலவரெனத் திரிய லாமே
தவறான பாட்டெழுத தலையில் குட்டும் பிள்ளைப்
பாண்டியும் குறும்பியளவுக் காதை வெட்ட வில்லி யில்லை இரண்டுத் தலை முடிகளை ஒன்றாய் முடித்து
வெட்டி மகிழ்ந்த ஓட்டக் கூத்தனும் இன்றில்லை
இலக்கணம் அறியாத அறிவில்லா துரைகள்
தேசமெங்கும் புலவரென சொல்லித் திரிகின்றார்
இன்று கண்டவனெலல்லாம் கவிதை என்று கிறுக்கி
தன்னைத்தானே புலவன் கவிஞன் என்று சொல்லி
ஏமாற்றி வருகிறார் என்பதாம்
s.....