வருந்த செய்யும் மனித பிறவி

வருந்த செய்யும் மனித பிறவி

அழகான மயில்கள் ஆடுவதைக் கண்டு
ஆடாத மிருகங்கள் பொருமுவதுண்டு
இனிமையாகப் பாடும் குயில்களைக் கண்டு
ஈனக்குரலில் பிற பறவைகள் முனகுவதுண்டு
உயரமாக இருக்கும் சிவிங்கியைக் கண்டு
ஊமை மொழியில் முயல்கள் சபிப்பதுண்டு
என்றும் சுமை தூக்கும் கழுதையைக் கண்டு
ஏற்றம் இறைக்கும் எருதுகள் சிரிப்பதுண்டு
ஐந்தறிவு படைத்த இந்த மிருகங்கள் யாவும்
ஒற்றுமையாக வாழ்ந்திட காடு இடமளிப்பதுண்டு
ஓநாய்கள் ஓய்வின்றி அங்கு ஓலமிடுவதுண்டு
ஒன்றுக்கு மற்றொன்று உணவென அறிந்தபோதும்
மானிடர்களைப் போல் ஏமாற்ற அறியாத அவைகள்
நம்மிலும் உயர்ந்தவைகள் என அறியும் வேளை
மனம் பொருக்க முடியாமல் வருந்துகின்றதுவே

எழுதியவர் : கே என் ராம் (9-Jul-23, 4:41 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 28

மேலே