தீபம்
பண்டிகை தோறும்
படபடப்பாக எழுந்து
பட்டுடுதி அலங்கரித்து,
பகட்டாக ஊர்வலமாக
பார்ப்பவர்கள் விழியுருத்த
ஆயிரம் ஆலயங்களில்
ஆயிரம் திபமேற்றி
ஆரவாரமாக பறைசாற்றிடும்
ஆன்றோர்கள் அனைவருக்கும்
ஆழ்ந்த வருத்தங்கள்....
தீராத வேதனையுடன்
தீபமேற்றி வழிபடினும்,
தீதை மனதிற்ப்பதித்து
தீவிரமாய் ஏற்றும்
தீபத்தை தெய்வமேற்கா....
ஈடாக,
மழலை நெஞ்சினில்
மாறாத நட்பையும்,
மங்காத கல்வியையும்,
மங்காமல் விதைத்து
மங்களம் காத்திடுவோம்....
சாதித் தீயகற்றி
சான்றோனை அரவணைத்து
சாற்றிடுவோம் பறை
சாதிக்கும் தாகம்
சாகும்வரை குன்றாதென்று.
பாரெல்லாம் புகழும்
பாரதியின் வாரிசென்று
பறை சாற்றிடுவோம்,
பண்பை வளர்த்திடுவோம்
பாரதம் செழிக்கட்டும்....
ஏனெனில்,
நாளைய பாரதம்
நாம் இல்லை,
நட்புடன் பரிமளிக்கும்
நம்வாரிசுகள் தான்
நாளைய இந்தியாவின்
நகராத தூண்கள்....!!!
கவிபாரதீ ✍️