மௌனமோர் மின்னிடும் உன்னத ஓவியம்

உன்மௌனமோர் மின்னிடும் உன்னத ஓவியம்
புன்னகை பூவிதழ் தன்னில் ரவிவர்மன்
தூரிகை கொண்டழகாய்த் தீட்டி முடித்திடுவான்
காரிகையே காதலியே பார்

உன்மௌனமோர் மின்னிடும் உன்னத ஓவியம்
புன்னகை பூவிதழ் தன்னிலே -என்னன்பே
தூரிகையால் நல்ரவி தீட்டி முடித்திடுவான்
காரிகையே காதலில் பார்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jul-23, 10:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 53

மேலே