மனதை திருடிய மலரே

மனதை திருடிய மலரே
××××××××××××××××××××
மனதை திருடிய மலரே என்னோடு
மணம் காண மணமகளாக வாராயோ
கானம் பாடும் சலங்கை ஓசைக்
காதோடு ராகமாகக் காதலைச் சொல்வாயோ

கயலாகக் கண்ண சைவில் உருகுகிறது
இரும்பான இதயமும் உருக்கான உள்ளமும்
மயில் தோகை விரிக்க கலையும்
மேகமாகக் கரைகிறுதே என் எண்ணங்கள்

கவலை கொள்ளும் நேரத்திலே பஞ்சான
கன்னம் இன்பம் சேர்க்க வேண்டும்
சவலைநோய் தீண்டிடும் வேளையிலே உதடுகள்
சூப்பாகப் பிணிக்கு மருந்தாக வேண்டும்

நீ சிந்தும் சிரிப்ப லையில் மனக்கோட்டை
கப்பல் விட்டு மனம்மகிழ வேண்டும்
வஞ்சித்தாலும் காதலை மறுத்தே வெறுத்தாலும்
வஞ்சிதனுக்கு சோகமும் சுகம் தானே...

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (15-Jul-23, 12:33 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 167

மேலே