சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஆடி 2 ~~~~~

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆடி 2
~~~~~

உக்கிர பாண்டியர்
\\\\\

நாடு நல்ல நல்ல நாடு
நாகரிகம் மாற நம்ம நாடு
ஒற்றுமையில் சிறந்த நாடு
ஒழுக்கத்தை பேனும் நாடு

நாலு போகம் விளையும் நாடுயிது
நற்றமிழ் பேசிடும் செந்தமிழ் நாடுயிது
உக்கிர பாண்டியர் ஆண்ட நாடுயிது
உழவர்கள் உயர்த்திய நாடுயிது

தென்பாண்டிச் சீமையின் மறவர் குல
தென்னக மன்னன் உக்கிர பாண்டியர்
தொள்ளாயிரம் ஆண்டுக்கு முன்
திருநெல்வேலிக்கு வடக்கே

உக்கிரன்கோட்டையில் கோட்டை கட்டி
உண்மை நெறி தவறாது
உத்தம பாண்டியன் ஆட்சி செய்து
உவகை செய்து வளர்த்த நாடுயிது

ஈசனுக்கும் ஈஸ்வரிக்கும் மதுரையில் பிறந்தவன்
ஈன்ற மகனுக்கு தாய்பாலை புட்டியில் ஊட்டிடவே
ஆறு மாதத்தில் அமுதூட்டி
ஆறு வயதில் வில்வித்தை வாள்வித்தை கற்றவன்

இளம் வயதில் அரசனாக முடிசூட்டி
இமயம் வரை போரில் வென்றவன்
உக்கிரன்கோட்டை மறவர் குல பாண்டியர்களின்
உயரிய ஆயுதப் படைத்தளம் அமைத்து

செல்வ செழிப்பாக ஆண்டு வந்த
சிறந்த வேளையில் ஒரு நாள் ....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்


தொடரும்....

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (17-Jul-23, 9:07 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 30

சிறந்த கவிதைகள்

மேலே