அந்த மனிதனை பற்றி
அந்த மனிதனை பற்றி
விடிந்து நீண்ட
நேரமாகி விட்டது
வெளிச்சத்தை
அறிவித்து
காணாமலும்
போய்விட்டது
பறவை கூச்சல்கள்
அதிகாலை பரபரப்பில்
ஆர்ப்பரிக்கும்
அந்த தெருவின்
சத்தங்கள் அடங்கி
விட்டது
சூரியன் கூட
வந்து விட்டான்
விடியலுக்கு முன்
விழித்து எழுந்து
குளித்து
திருநீறு பூசி
திருப்பாவை திருவெம்பாவை
பாடி
அந்த
தெருவை விழித்து
எழ செய்த
மனிதன் இன்னும்
விழிக்கவில்லை
நீண்ட உறக்கமோ?
மீளாத உறக்கமோ?
அடுத்த பரபரப்பு
அவர் வீட்டில்
ஆரம்பித்திருந்தது
நல்ல மனிதன்
தூக்கத்திலேயே…!
இதுக்கும் கொடுப்பினை
வேணும்..
பேசி கொண்டே
அவர் வீட்டை
நோக்கி
அக்கம் பக்கத்தார்…!