அனுமதி வேண்டிடி னழகிற் சோதியன் - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
அனுமதி வேண்டிடி னழகிற் சோதியன்
தனிவழி காட்டுவான் தயவுங் கூட்டியே!
கனமழைத் தோற்றமாய்க் களிப்பும் மேவிட
மனநிறை வெய்தினேன் மகிழ்ச்சி பொங்கவே!
- வ.க.கன்னியப்பன்