உறக்கத்தில் அவள் அழகு
கண்ணே கண்மணியே என் கண்ணம்மா
கண்ணுறங் கையிலும் அமைதி உன்முகத்தில்
காண்கின்றேன் நான் உன் உள்ளம்
அதில் என்மனம் கொள்ளைக்கொள்ள
இதோ நீமெல்ல அசைகின்றாய் பாவையே
புன்சிரிப்பு உன்முகத்தில் மெல்லத் தவழ
அதிலும் ஓர் மென்மைக் காண்கின்றேன்
பூவின் மென்மை பூவையே உன்னைக்
காதலியாய் நான் அடைய என்பாக்கியமே
பொய்கையில் பூத்த தாமரைபோல் நீ
ஆழ்ந்த அழகு உயிர்ப் பாவை
மன்மதனும் மயங்கும் பெண்ணரசினீ
என்வாழ்வில் எனக்கு பெருந்தனம்நீயே