கைக் கொள்ளுங்கள்
"உறவும் உரிமையும் உனக்கென வாழட்டும்
அன்பும் நன்மையும் உனக்காக வாழட்டும்
நன்றியும் கருணையும் உன்னாலே மலரட்டும்
நாணமும் வீரமும் உன்னுயிர் ஆகட்டும்
அறிவும் அடக்கமும் உன்னுள்ளே வளரட்டும்
உண்மையும் நேர்மையும் உன்னாலே நடக்கட்டும்
அழகும் ஒழுக்கமும் உன்னாலே பேசட்டும்
ஒற்றுமையும் மேன்மையும் உனக்கே உரித்தாகட்டும்
பகுத்தறிவும் பட்டறிவும் உனைத்தேடி அடைந்திடட்டும்
முயற்சியும் வெற்றியும் உனக்கே விழுதாகட்டும்
நம்பிக்கையும் மன உறுதியும் உனக்கான உரமாகட்டும்
உலகும் உள்ளமும் உன்னையே வாழ்த்தட்டும்"

