மணிப்பூர் காமூகன்களே

மணிப்பூர் காமூகன்களே
××××××××××××××××××××÷×××
மணிப்பூர் காமூகன்களே
மகளிரென்ன விளையாடும்
கைப்பாவையென நினைத்தாயோ

நிலவை பெண்ணாக வர்ணிப்பதால்
பெண்களை
உடையின்றி அவமானப்படுத்தினாயோ

பூமியை பெண் என்பதால்
காலடித் தடமென மிதித்தாயோ

மலரென பெண்ணை அழைப்பதால்
கசக்கிக் குப்பையில் வீசினாயோ

துரியோதனாகத் துயிலுரித்தவனை
தோலுரிக்க வேண்டும்

தறிகெட்டு ஆடும்
தரித்திரப் பேய்களை
தீயிக்கு இரையாக்க வேண்டும்

பாரத நாட்டிலே
வாடிக்கையாக நிகழும்
கொடுமையை அடக்கிட

வேடிக்கை மனிதராக
ஆட்சியாளர்கள் இராது
துடிதுடிக்கச் சாவடிக்கும்
கொடுமையானச் சட்டம் செய்...

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (22-Jul-23, 6:04 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 62

மேலே