நம்பிக்கை

நம்பிக்கை!!!
//////////////////

நம்பிக்கை விதைகளை
மனவயல் எங்கும்
ஊன்றி வையுங்கள் !

வாய்ப்புத் தூரலில்
மெல்ல வளரந்திடும் !

பெருமழை வெற்றிகளில்
விருட்சங்களாய்ப் பேருரு எடுத்து

வானத்திற்கு அப்பாலும்
வசந்தம் வீசிடும் !

அவ்வப்போது முளைத்திடும்
அச்சம் தயக்கம் முயலாமை
எனும் அனைத்துக் களைகளையும்

கூடாநட்பு
எனும் ஒட்டுண்ணிகளையும்
அடியோடு களைந்திடுங்கள்!

மகிழ்ச்சித் தென்றல்
வாழ்க்கை வனங்களில்
எப்போதும் வீசிடும் !!

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (26-Jul-23, 10:37 am)
சேர்த்தது : யாதுமறியான்
Tanglish : nambikkai
பார்வை : 263

மேலே