அழுதிடு அல்லது அழித்திடு

அழுதிடு அல்லது அழித்திடு
×××××××××××××××××××××××××
வானமே அழுதிடு
வளமே பிறந்திடு
தானமே செய்திடு
தானியமே விளைந்திடு

வனமே உருவாகிடு
வாழிடம் தந்திடு
கானகமே சுவாசத்திடு
காற்றைச் சுத்தமாக்கிடு

மூச்சுக்காற்றே வந்திடு
மனிதர்க்கே உயிர்கொடு
அச்சமின்றி வாழ்ந்திடு
ஆக்ரமிப்பை அகற்றிடு

நீரோட வழிவிடு
நீர்நிலைக் காத்திடு

நீராதாரம் பெருக்கிடு
நீர்யில்லா நிலையாக்கிடு

மகத்துவம் அறிந்திடு
மக்களே திருந்திடு
இல்லாவிடில் மழையே
பெருக்கெடுத்து அழித்திடு

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (24-Jul-23, 12:57 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 79

மேலே