விழியால் பருகுவேன்

காலை தேனீர் வாசம்
சுவாசம் கலந்திட
மென்னகை பரவும்,
என்தன் சுவாசம்
கலந்த தேவதையின்
நிலவு முகம்தனில்....

செங்காந்தள் இதழ்கள்
இனிதே பதிய சுற்றம்
மறந்து சுவைத் திடுவாள்
சுகமாய் யதன் சுவையை...

அவளின் இள மஞ்சள்
நிற தொண்டை குழியில்
இதமாய் இறங்கும் தேனீர்,
இனிதே கலந்திடும் அந்த
சுவை என்னுள்....

நித்தம் நித்தம் என்னவளின்
தேனீர் இடை வேளையில்
விழியால் பருகுவேன் பருவ
மங்கையின் மயக்கும் அழகை,
அவள் பருகும் தேனீர்சுவை
இனிக்கும் என் நாவில்....



கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (27-Jul-23, 9:52 am)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 288

மேலே