நூல்போல் இடையசைய நுதலில் நிலவசைய

நூல்போல் இடையசைய நுதலில் நிலவசைய
மால்போல் கருநிற மேனி யசைய
சேல்போல் விழிகள் இரண்டும் அசைய
கால்தனில் கொலுசுகள் ஒலிக்க நடந்தாய்

நூல்போல் இடையசைய நுதலில் நிலவசைய
மால்போல் கருநிறத்தில் மேனி யசைந்திடவும்
சேல்போல் பூவிழிகள் இரண்டும் அசைந்திடவும்
கால்தன் னில்கொலுசு ஒலிக்க நடந்தாய்நீ

நூல்போல் இடையசைய நுதலில் நிலவசைய
மால்போல் கருநிறத்தில் மேனி யசைந்திடவும்
சேல்போல் பூவிழிகள் துள்ளி அசைந்திடவும்
கால்தன் னில்கொலுசு சப்திக் கநடந்தாய்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jul-23, 10:09 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 90

மேலே