ஓதுவன் தேவாரப் பா
ஓதுவன் தேவாரப் பா !
*****
அன்பினை மழையாய் ஊற்றி ,
.... அறிவுடன் பண்பை ஊட்டி ,
நன்றியில் பிறழா மாண்பு
.... நானென்றும் வழுவா தோங்க ,
அன்னவன் சிவனும் என்னை
.... அவனியில் உலவச் செய்ய ,
ஒன்றிடும் தேவா ரப்பா
.... ஒதுவன் இவனும் பண்ணில் !
********