பழமுதிர் சோலை
பழனியில் சிரிப்பவன் ஆண்டியாய் நின்றவன் - முருகனோ
பழமுதிர் சோலையில் சுட்டசுடாப் பழம்கேட்டவன்- முருகனோ
பழக்கனி பஞ்சமுதம் ஏற்று அருள்பவன் -முருகனோ
பழனியில் மொட்டை அடித்தோர்க்கு அருள்பவனும் -முருகனோ
தகவல் :--
பழமுதிர் சோலை =பழம் உதிர் சோலை என்றுதான் பொருள் கொள்வோம்
பழம் முற்றிய சோலை என்று பொருள் கொள்கிறார் நச்சினார்க்கினியர்
வள்ளியை பயமுறுத்த விநாயகர் யானையாய் வந்த இடம் இதுதான்
ஒளவையிடம் சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று முருகன்
கேட்ட இடமும் இதுதான்