துன்பம் நீங்கிடத் தொடர்ந்திடும் நன்மைகள் - கலித்துறை
கலித்துறை
(மா விளம் விளம் விளம் காய்)
தென்றல் வந்திடும் தென்டிசை தேன்மொழி
..வருவாளே;
சொன்ன மன்னதோர் சுடரவள் சொந்தமும்
..ஆகுவளே;
நன்செய் விளைந்திடும் நாளினில் நன்மையும்
..பெருகிடுமே!
துன்பம் நீங்கிடத் தொடர்ந்திடும் நன்மைக
..ளென்பேனே!
- வ.க.கன்னியப்பன்