சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 19
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 19
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கரலிங்கர்
°°°°°°°°°°°°°°°°°
அரியும் சிவனும் சமமென்றும்
அன்பினாலும் தியகத்தாலும்
அடைக்கலம் அடைந்திடலாம்யென
உணர்த்தவேச் சங்கரநாராயணராக
உருவெடுத்து அவதரித்த
உலக நன்மைக்குச் சிவனில்
உறைந்த இடப்பாகத்தை
உடன் பிறந்தவனுக்கு
உமையாள் விட்டுக் கொடுத்த
ஈசன் திருமேனியின்
இடற்புறத்தை ஆட்கொள்ள
தவத்தை தொடர்ந்தால் உமையாள்
தவத்தை தொடரும்
தேவியே வேண்டும்
வரம் கேள்
வினவினார் சிவபெருமான்
ஈசனே
உம்மை மணக்க
உடன் பிறந்தவன்
உருவில் இணைந்திருக்கையில் இயலாது
உம் திருவுருவை திரும்ப பெருக
உமையாள் வரம் கேட்க
சங்கரலிங்கராக காட்சி தருகிறார் ...
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

