சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 20

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 20
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஸ்ரீ கோமதி அம்மன் திருக்கல்யாணம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அம்பிகையின் தவத்தை
அஷ்டமூர்த்திக் கண்டு
மனதுருகித் தேவியே
மரத்தடியில் கடும் தவம்
கண்டேன் வேண்டும் வரம்
கேள்யென வினவ

சங்கன் புதுமன்
சந்தேகம் தீர்த்தவரே
சைவ வைனவ
சண்டையை நீக்கியவரே
சிவப் பக்தர்களின்
சங்கடங்களை விலக்கி
சடுதியில் வந்தவரே

கடும் தவம் ஏற்று
கூற்றுதைத்தானே உள்ளத்தில் எனையேற்றி
சங்கரலிங்கராக சங்கையில்
சங்கமித்தது உடன் உறைந்து
சங்கரன்கோவிலில் அருள்புரிந்து
எங்குலம் தலைக்க
எழுந்திடுக ஈசனே

அம்பாள் வேண்டிட அரிசிவன்
அவதாரம் கலைந்து சங்கரலிங்கராக
அவதரித்து ஆவுடையாளை
அன்பினால் கலந்நிட

அணியாருள் நன்நாளில்
அணிகலன்கள் சூட்டி
அலங்காரங்கள் பல கொண்டு
அன்னை கோமதியம்பிகை உடனமர்
அருள்மிகு சங்கரலிங்கர்
அன்னவாகனத்தில் எழுந்தருளி

திருக்கல்யாண வைபவத்திற்கு
தேரோடும் வீதியில்
தாளம் மேளத்துடன்
உலா வருகையில்
உமையவளை கண்டு
தலைபணிந்து அம்மனை
துதித்து பாடினால்
தனியாத சிந்தனையை
தந்தருவாள் கோமதித்தாய்

சங்கரலிங்கர் கோமதியம்பிகைக்கும்
கோமதியம்பிகைச் சங்கரலிங்கர்க்கும்
மாலை மாற்ற
மங்கையர் குலவையிட
தேவர்களும் முனிவர்களும்
திருமணக்கோலத்தைக் கண்டு வாழ்த்தி
தெய்வ அருள் பெற்றனர்

சங்கரலிங்கர் கோமதியம்பிகை
திருமணக் கோலம் கொண்டு
சங்கரன்கோவில் மக்களுக்கு
அருள்புரிய உறைந்தனர் ....

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (4-Aug-23, 5:28 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 33

மேலே