சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 18
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 18
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அரியும் சிவனும் ஒன்றே
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நீல வானத்தில் கருமேகம் கண்டு
நீளத் தோகையை விரித்திடும் மயிலாக
பசி கண்ட
பச்சிளம் குழந்தை
தாய் கண்டு
திருவாய் மலர்ந்து
புன்னகைப்பதுப் போன்று
புன்னைவனத்தில் சங்கரநாராயணன்
காட்சியைக் கண்ட
கோமதியும் முனிவரும்
தேவலோகத் தேவர்களும்
தோட்டத்துப் பூக்களும்
மழைக் கண்ட பூரிப்பில்
மணலை முட்டி தளிர்
விடும் விதையாக
கடும் தவத்திற்கு
கிடைத்த பலனை
கண்டு உருகி
கண்ணில் ஆனந்தக்
கண்ணீர் பெருக்கெடுக்க
கண்டனர் அரன்நாராயணன் திருமேனியை
சிவனே தமிழரென்றும்
திருமால் தமிழர் அல்ல
என்ற வாதமைக்கும்
சைவ சமயத்தவர்
வைணவ சமயத்தவர்
என்ற பகைமைக்கும்
பிறந்த விடு
புகுந்த விடு
இரு விடும்
பெண்மைக்கு பெருமையேயென
திருப்பதியான் திருவேங்கடேஸ்வரன்
தமிழர் எனவும்
அரியும் சிவனும் ஒன்றே
அறியாதவன் வாயில் மண்யென
உலகம் உணர்ந்திட
உமையவள் வேண்டிட
சங்கரன்கோவில் தலத்தில்
சங்கரநாராயணராகக் காட்சியளித்தார்
திருக்கோலம் கண்டிட
தலைக் குனிந்து
தவற்றுக்கு வருந்திட
சந்தேகம் தீர்ந்த
சங்கன் பதுமன்
பேதுமை ஒழிந்து
பாசத்துடன் ஒற்றுமையாக
சாப விமோசனம்
வரம் பெற்று
அறம் செய்தனர்
அரியும் சிவனையும் கண்டப் பின்னும்
அம்மரத்தடியில் மீன்டும் கடும் தவத்தில்
உமையவள் இருந்திட ......
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்