சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 17

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 17
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கரநாராயணர் காட்சி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
புன்னைவனத்தில் உமையாள்
புன்னை மரத்தடியில்
கடும் தவத்தில்
கண் திறந்து
மெய் மறந்து
மெய்ப் பொருளின்
ஞானத் தவத்தால்
புறக்கண் பார்வை
அகக்கண்ணாக மாற

பார்வதி தேவியின் தவத்தை
பார்த்து ஈசன் மனதுருகி
சந்தேகத்தைத் தீர்த்தருள
சந்தர்ப்பம் இதுவேயென எண்ணவே
கடக இராசியில்
கதிரவன் பிரவேசிக்க
சந்திரன் மகரத்திலிருந்து
சொந்த வீட்டை
ஏழாவதுப் பார்வையாக
எட்டிப் பார்க்க

ஆடி மாதத்தில்
அழகிய உத்திரட்டாதி நட்சத்திரத்தில்
பெளர்ணமி நன்நாளில்
பிரகாச நள்ளிரவில்
தென்றல் குளிரும் வேளையில்
தன் மேனி
சரிப் பாதி
சங்கரனாகவும் மறு பாதி
நாராயணாகவும் திகழந்து
நற்காட்சியாகச் சங்கரநாராயணராக

சிவனுக்குரிய வலப்பக்கத்தில்
சிவப்பு நிறமேனியுடன்
சிரையில் பிறையுடனும்
கங்கை அக்னியுடன்
கருமேக ஜடமுடியுடன்
காதில் தோடும்
கையில் கோடாரியும்
மார்பில் ருத்ராட்சம்
மடி இடையில்
புலி உடையும்
படமெடுத்துக் குடைப்
பிடிக்கும் சங்கனை
திருவாசில் கொண்டவராகவும்

திருமால் இடைப்பக்கத்தில்
நீலவண்ணத் திருமேனியாக
நவமணிக் கிரீடம் சூட்டி
காதில் மாணிக்க
குண்டம் அணிந்து
மார்பில் துளசிமணி
மடி இடையில்
பீதாம்பரம் சூடி
பதுமன் குடை
பிடிக்கும் திருவாசில்

எழுந்தத் திருவடியில்
இடப்புறம் கருடனும்
வப்புறம் நந்தியுமாக
வைணவமும் சைவமும்
அரியும் அரனும் ஒன்றன
அறிந்துச் சமமென
உலகுக்கு உணர்த்த
உமையவள் தவத்தில்
அவதரித்தர் சங்கரநாராயணராக ...

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (1-Aug-23, 5:51 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 17

மேலே