சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 16
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 16
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆடி : 16
°°°°°°°°°°°
தபசு காட்சி
°°°°°°°°°°°°°°
ஹரியும் ஹரனும் ஒன்றேயென்று நிருபிக்க
அன்னை பராசக்தி
பூலோகத்திலிருந்து
புன்னைவனம் வந்தாள்
சிவனும் விஷ்ணும்
சங்கரநாராயணராக இணைந்து
சிவசக்தி ரூபத்தில்
காட்சித் தர வேண்டுமென
கையில் விபூதிப் பையுடன்
ஒற்றைக் காலில்
ஊசிமுனையில் நின்று
கடும் தவமிருக்கும்
காட்சியில் யோகினியாக
திருமுகம் மதிப் போல் பிரகாசிக்கும்
திருக்கோலம் கண்டிட
தேவலோக மாதர்கள்
பசுக்கள் வடிவில்
புன்னைவனம் வந்தனர்
ஆடி பெளர்ணமியில்
அம்பாளுக்கு காட்சியளித்தார்
சங்கரநாராயணராக ...
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்