புலம்பல்கள்-1

தேடித் திரிந்து வினையற்று
பாடிப் பறந்து பற்றற்று
காணக் கிடைக்கா ஒளி கண்டு
காலம் கடந்தேன் எனை வென்று!

தனியே அமர்ந்து சிந்தித்து சிந்தித்து
சிறைப்பட்டு இறுதியில்
உனை சந்தித்து
சரணடைந்தேன்!

ஓயாத எண்ணத்தை ஓட விரட்டி
தேயாத மதி போல
ஒரு வடிவமாக்கி
போராட்டம் ஏதுமின்றி
என்னுள் என்னை நான் கண்டேன்!

எழுதியவர் : தவம் (5-Aug-23, 11:29 am)
சேர்த்தது : வடிவேலன்-தவம்
பார்வை : 42

மேலே