வாழ்க்கைக்கு வழிகாட்டி இறைநாமம்
இருண்ட காட்டில் வழிதெரியாது வந்து விட்டேன்
மருண்டனான் மலையாய் நம்பி கண்ணா வழிகாட்டு
என்றே வாய்விட்டு கூவி அழைத்தேன் நெஞ்சில் அவன்
நாமம் உண்மை உண்மை என்றே பதித்து
கண்ணன் என்னைக் கைவிடவில்லை அன்று யானைக்கு
அபயம் தந்தோன் இருண்டவானில் நிலவொளி பரப்பி
அங்கு துருவமண்டலமாய்த் தோன்றினான் துருவன்
திசைக்காட்ட கானகம் கடந்தேன்' வீடு' சேர்ந்தேன் நான்
கண்ணனை நம்பிடுவாய் வாழ்வில்' இன்பம் 'கண்டிடலாம்