தென்னை ஓலையில் கட்டிய குடிசை
தென்னை ஓலையில் கட்டிய குடிசை
"""""""""""""""""""""""""""""""""""""""""'""""""""""""""""""""""""""""""""""
கதிரவன் கக்கிடும்
கனலையும் முழுங்கி
இதமானக் குளிர்ச்சியை
இயற்கையோடுத் தந்திடும்
தென்றல் காற்றும்
தவழ்ந்து தாலட்டும்
தென்னை ஓலையில்
கட்டிய குடிசையில்
கொடியுடன் செடியும்
காக்கையுடன் குருவியும்
கூடுகட்டிக் கூடிவாழும்
குடியிருக்கும் மனிதருடன்
இரவில் நிலவும்
ஒளிரும் விளக்காக
வறுமையில் தவிக்கும்
விவசாயி வாழ்வைக்கண்டு
ஓலைக் குடிசையும்
கண்ணீர் வடிக்கும்
ஓயாமல் பெய்யும்
கன மழையில்
காற்றும் வந்து
தழவிச் செல்லும்
உடையில் கிழிந்த
சாளரம்(ஜன்னல்) வழி
மச்சு வீடுக்
கட்டச் சொல்லி
அரசு தந்த
லட்சத்துல திருடுபோக
கைக்கு வந்தது
சில்லறைக் காசு
இன்னிலை மாறவேண்டும்
இனியவர்கள் ஆளவேண்டும்
#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்