மலர்விழி வந்திடு மாலைப் பொழுதில்

மலர்விழி வந்திடு மாலைப் பொழுதில்
இலவுகாத்த அந்த இளங்கிளி ஆக்கிடாதே
மாலை நிலாவுமே மெல்ல நகர்ந்திடும்
காலம்தாழ்த் தாதுவாநீ பூ

மலர்விழி வந்திடு மாலைப் பொழுதில்
இலவுகாத்த பூங்கிளி என்பார் -- நிலாவெழிலே
மாலை நிலாவுமே மெல்ல நகர்ந்திடும்
காலம்தாழ்த் தாதுவாநீ பூ

எழுதியவர் : கவின் சாரலன் (10-Aug-23, 8:38 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 61

மேலே