சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 26

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 26
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கரன்கோவில் கோவில் கொடிமரச் சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
படிக்கட்டைக் குனிந்து தொட்டால்
பரவசம் அடையாலம் இறைவனின்
அருள் அதிர்வலையாள்
அண்ணாந்துப் பார்த்துக் கொடிமரத்தை வணங்கினால்
ஆனந்தம் உண்டாகும் மனதில்

மனிதனை நிமிர்த்துவது முதுகெலும்பு
ஆலயங்களை நிமிர்த்துவதுக் கொடிமரம்
முதுகெலும்பில் உள்ள 32 வளையங்களும்
மூலதாரம் சுவாதிஷ்டானம் மணிபூரகம்
அனாகதம் விசுக்கி ஆக்ஞையென
ஆறு ஆதாரங்களும் இடை பிங்கலை
சுழிமுனையென மூன்று நாடிகளின்

அடிப்படையில் 32 வளையங்களுடன் கொடிமரம்
ஆகமத்தின் விதிப்படி நந்திதேவர்க்கு முன்பாக உள்ளது
நந்திதேவர் சிவலிங்கத்தின் முன்னே ஆனந்த
நிலையில் இளமையும் திட்பமும் கொண்டவராகவும்

சங்கரநாராயணர் கோவிலின் உள்கோபுர வாசலின்
தென்புற மண்டபத்தில்
வடதிசை நோக்கி
அதிகார நந்தியாக
அன்னைத் தேவியுடன் இருப்பது
இத்தலத்திற்கு மட்டுமே சிறப்பு

மூன்று அரை ஆடி உயரத்தில்
நான்குப் புயங்களுடன்
கையில் பிரம்புடன் உடைவாளும்
இருப் புயங்களில் மானும் மழுவும் உண்டு
மான் வேதத்ததை குறிக்க
மழு வீரத்ததை குறிக்க காட்சி தரும்
அதிகார நந்தியிடம் சிவனை வணங்கிட
அனுமதி வாங்கினால்தான் சிவலிங்கத்தினை தரிசிக்கலாம் ....

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (10-Aug-23, 5:22 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 26

மேலே