செவ்விதழ் உனைநான் பாடுவேன்

புன்னகைத் தாமரை பூக்களின் ராணியென்பர்
தென்றல் கதிரொளி சேர்ந்து தொடவிரியும்
செவ்விய பூவினை செந்தமிழ் பாடவுன்னை
செவ்விதழே நான்தானே சொல்

புன்னகைத் தாமரை பூக்களின் ராணியென்பர்
தென்றல் கதிர்தொட பூமலரும் -- பொன்பொழில்
செவ்விய பூவினை செந்தமிழ் பாடவுன்னை
செவ்விதழே நான்தானே சொல்

புன்னகைத் தாமரை பூக்களின் ராணியென்பர்
தென்றல் செங்கதிர் தொடமல ரும்பூ
செவ்விதழ் உனைநான் பாடுவேன்
செவ்விய மலரினை செந்தமிழ்பா டும்போதிலே

எழுதியவர் : கவின் சாரலன் (15-Aug-23, 8:55 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 111

மேலே