சுதந்திர தினம்
ஒவ்வோர் வருடமும் சுதந்திர தினம்
ஒரு தனி தினமாய் வந்து போகிறது
தொலைக்க காட்சியில் அன்று முழுதும்
ஒரு சம்பந்தமில்லை திரையுலக காட்சிகள்
ஐயா இந்த ஒருநாளாவது நமக்கு
சுதந்திரம் வாங்கித்தந்த தியாகிகளை
நினைத்திட நாடகம் பட்டிமன்றம் இவைகளைக்
தொலைக் காட்சியில் காட்டக் கூடாதா
நம் இளைய தலை முறையினர் அறிந்திட
மேலும் நாடு நமக்கு எத்தனை
சுதந்திரம் தந்துள்ளது தனி மனிதனாய்
சுய மரியாதையுடன் இனிதே வாழ b
என்று ஆக்க பூர்வமாய் நாம்
ஒவ்வொருவரும் நம்மையே கேட்டு அறிந்து
கொள்வோமா
முயன்று பாருங்கள் பதிலும் கிடைக்கும் கூட
சுதந்திர நாடு ஆம் ....ஐயா
கழுதைக் கூட இந்நாட்டில் வாழ்கிறது
சுதந்திரமாய் வாழ்கிறதுதா ? இல்லை அது அறியாது
அதுதான் சாமானிய மனிதன் நிலையம் இங்கு
பெரும்பாலான மக்கள் கல்வி செல்வம்
பெற்றார் என்றால்......நாடு சுதந்திரம் அடைந்தது எனலாம்
இது என் கருத்து...
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
எனது இனிய சுதந்திர வாழ்த்துக்கள்