சந்திரனில் இறங்கிய சந்திராயன் ௩

iஇந்திய விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் தனித்திருநாள் இன்று
இன்று இவர்கள் கடந்த நான்கு வருடங்கள் தவமாய் இருந்து
விண்ணில் செலுத்திய சந்திராயன்-௩ என்னும் விண்கலம்
நடன அரங்கில் அரங்கேற்றம் செய்ய வந்த அழகு மங்கையைப்போல்
சந்திரனின் இதுவரை அமெரிக்கரோ, ரஷ்யரோ சீனரோ கூட
வெற்றிபெறாத தெற்கு துருவத்தில் நம் இந்திய விண்கலம் என்னும்
நங்கை தன வலது காலை வெற்றியுடன் பதிய வைக்க
இன்னும் சில நாட்கள் இவள் மோஹினியாட்டமே அங்கு
இவள் நடன அரங்கேற்றம் பூரண வெற்றி அடைய எல்லாம்
வல்ல இறைவனை நாம் வேண்டுவோம்
பாரதியின் கனவு நெனவாகிறது தூய உள்ளம் உள்ள
மாமனிதன் மாபெரும் கவிஞன் பாரதியை இன்று
நாமும் நினைவு கூறலாம்
வாழ்க பாரதம்......வளர்க பாரதம் வாழ்க இந்நாட்டு மக்கள்
வாழ்க நம் நாட்டு ஆற்றல் மிக்க விஞ்ஞானிகள்
கல்லாய் இருந்தாலும் சந்திரனும் நம் பூமியைப்போல் மங்கையே
நிலவு மங்கை ...... நாளை நிலவே உன்மண்ணில் நாங்களும்
உறவு சேர்க்க குடும்பத்துடன் வந்து இறங்கவா ? ஆசிக்கூறு

ஜெய் ஹிந்த்......ஜெய் ஜெய் இந்தியா

i

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (23-Aug-23, 7:31 pm)
பார்வை : 57

மேலே