வானமும் வைரமும்

வானத்தை பார்க்கையில் தெரிவது நிலவு
நான் துயிலும்போது காண்பதோ கனவு

ஆகாசத்தில் நெருப்புபோல் எரியும் கதிரவன்
நானோ அட்டகாசமாகத் தெரியும் வைரவன்

இரவினில் ஆகாயம் நோக்கினால் விண்மீன்கள்
அருகில் வந்து பார்க்கையில் தெரியும் என் கைகள்

ஒரு நிலவு, கதிரவன், கணக்கிலடங்கா விண்மீன்கள்
நான் ஒரு வைரவன் இரண்டு கைகள் பல கனவுகள்

நிலாவுக்கு கவிஞர்கள், கதிரவனுக்கு உழவர்கள்
விண்மீன்களுக்கு யார் புகலிடம்? வைரவன்தான்!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (23-Aug-23, 3:01 pm)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : vaanamum vairamum
பார்வை : 117

மேலே