சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 39

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 39
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சங்கரன்கோவிலில் தலத்தில் மகா விஷ்ணுவாக
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எங்கும் நிறைந்தவனாக
எதிலும் இருப்பவனாக
அதர்மம் தலைதூக்கினால்
அவதாரம் எடுத்து
தர்மத்தை நிலைநாட்டிய
தசாவதாரங்களில் ராமர்
கிருஷ்ணர் சிறந்தவை

கடலின் நிறத்தை
மேனியில் கொண்டவனே
மெல்லியப் புன்னகையின்
விரிந்திடும் செவ்விதழையும்
வினைதீர்க்கும் ஆயுதங்களையும்
ஆசிர்வதிக்கும் கரங்களுடனும்
ஆதிசேசன் படுக்கையில்
லட்சுமி தேவி துணையிருக்க
லாவகமான படுக்கையில்

கன்றிடம் காட்டும் தாய்ப்பசுவின் அன்பையும்
காத்திடும் கடவுளாகவும் கடவுள்களுக்கெல்லாம் தலைமையானவனும்
கடவுள்களில் எளிமையானவனாய் ஏற்ற தாழ்வு
காணாமல் சங்கரன்கோவில் வருபவர்க்கு அருள்புரிபவேன

பார்வதி தேவியின் சகோதரனே
பழனி முருகனின் மாமானே
பிரம்ம தேவனின் மைந்தனே
பதினெட்டாம் படியனுக்கு மோகினி தாயே
பரம்பொருளாக இருப்பனே உன்னை வணங்குகிறேன்

கலியுகத்தின் தீயவைகள் அனைத்தும் அழிக்க
கல்கி அவதாரமாகப் பத்தாம் அவவதாரமெடுத்து
கொரோனா என்ற கொடிய அரக்கனை
கொன்று மக்களை காத்திட கல்கியாக
கர்மம் அழித்து தர்மம் காத்திட வா

சங்கையில் சேக்கிழாரை தொடர்ந்து
மகா விஷ்ணு அமர்ந்து அருள்புரிகிறார்
சங்கை வருவோர் அவரை வணங்கிடுங்கள்...

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (23-Aug-23, 6:05 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 7

மேலே