சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 37

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 37
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சங்கரன்கோவிலில் தலத்தில் ஸ்ரீ துர்க்கை அம்மனின் சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
துர்க்கையை வணங்கினால்
துயரங்களை தீர்ப்பாள்
தர்மம் கொடுத்து
தயவுடன் வணங்கினால்
தரிசனம் தந்து
தரித்திரம் ஒழித்து
தாய்போல் காப்பாள்

மேதியவுணனை அழிக்க
முத்தேவர்களின் மேனிலிருந்து
ஒளி வடிவில்
உருவம் தரித்து
துர்தரன் புகைக்காணன்
துன்முகன் முதலான
மேதியவுணனின் படைத்தளபதிகளையும்
மேதியவுணனையும் கொன்றிட

இந்திரன் அக்னித் தேவர்கள்
இன்முகத்தில் சந்தோஷம் வெளிப்பட
துர்க்கையை துதி பாடி வணங்கிட
தேவர்களின் செய்த
தோத்திரங்களில் மகிழ்ந்த தேவி
தேவர்களே வேண்டிய
வரங்களை கேளுங்கள் என்றாள்

தேவர்களோ அன்னையே
பகைவர்களிமிருந்து மனதுருகி
பாதுகாக்க வேண்டும் தேவியே என்றிட
அசுரர்களிமிருந்து உங்களுக்கு
அவர்கள் துன்பம் தந்தால்
அவர்களை அழிக்க பூமி வருவேன்
என்று கூறி சங்கை வந்தாள் ..

சங்கரன்கோவில் சங்கரலிங்கர்
சன்னதியின் வாயு மூலையில்
எங்கும் அமராத திசையான
தெற்குத்திசை நோக்கி அமர்ந்து
சங்கை மக்களுக்கு அருள்புரிகிறார்

உமையவளின் ஆங்கார வடிவத்தில் ஒன்று
யாவரும் வெல்லமுடியாத வெற்றிக்கு உரியவர்
முக்கண்ணி எண்கரத்தி சந்திரனை சடா
மகுடமாக அலங்காரம் கொண்டவள்

வலக்கரத்தில் திரிசூலம் வாள் சக்கரம் வில்
இடக்கரத்தில் பாசம் கோடாரி அங்குசம் கேடயமும்
குருதி வடியும் எருமைத்தலை காலடியில் கிடக்க
சிங்கம் மீது ஒரு கால் ஊன்றி
கம்பீரமாக நிற்கிறாள் தெற்கு வாசி துர்க்கை

ராகு காலத்தில் வணங்கினால்
தாலிப் பாக்கியம் நிலைத்து
கணவனின் ஆயுள் நீடிக்கும்
வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில்
நெய்தீபம் ஏற்றி வழிபடுதல் மிகச்சிறப்பு ..

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (21-Aug-23, 9:41 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 22

மேலே