சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 40

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 40
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சங்கரன்கோவிலில் தலத்தில் சுரதேவர் சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஊரெல்லம் இருக்கும்
உடம்பெல்லாம் அனல் பறக்கும்
சுரம்ந்தனை சுகமாக்கும்
சுரதேவரை வணஙகினால்

சிவாலயங்கள் தவறாது
சிறு தெய்வமாக இருந்திடுவார்
பெரு நோய்களையும்
போக்கி சுகம் தந்திடுவார்

திருமாலுக்கும் சிவனுக்கும் விளையாட்டாகச் சண்டையிட்டு
திருமால் கொடியச் சுரத்தை
உருவாக்கும்
அம்பினைத் சிவன் மீது எய்திட

பிரம்மன் சிவன் விஷ்ணு கலந்து
மூன்று தலைகளுடனும் ஆறு கண்களுடனும்
மூன்றுக் கை கால்களுடன்
கரத்தில் தண்டம் மணிச் சூலத்துடன்
காட்சித் தந்தார் சுரதேவராக சிவபெருமான்

சங்கரன்கோவில் வந்த சுரதேவர் நாயன்மார்கள்
சங்கமித்து அருள்புரியும் பிரகாரத்தில் வந்தமர்ந்து
சங்கை வரும் பக்தர்களுக்குத் தீராதபிணிகளையும்
சுகமாக்கி நலம்பெறத் திருத்தலத்தில் அருள்புரிந்து

தலை முதல் பாதம் வரை
தேகத்தின் வெளி உள் நோயானாலும்
குணமாக மனதார உருகி வேண்டி

கையளவுப் புது மிளகு வாங்கி
கைப்பட அம்மியில் துவையலாக அரைத்து
இரண்டு வெற்றிலை ஒரு களிப்பாக்கு
இரண்டு காம்புகள் இணைந்த வாழைப்பழம்
செவ்வரளிபூ வாங்கி சுரதேவர்க்கு

அரைத்த மிளகை அவன்மேனிச் சாத்தி
வெந்நீர் கொண்டு அபிஷேகம் செய்தால்
விரைவில் தீராத நோயும் குணமடையும்....

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (24-Aug-23, 5:34 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 18

மேலே