மனசாட்சியே இல்லையா

பரம்பரையாய்
படைத்துக் காத்த
பகவானுக்கு
பாவப்பட்ட மக்களை
பாசத்தோடு அரவணைத்து
பாதுகாக்க தெரியலையோ !

பகலவனை சூடாக்கி
பாரெங்கும் மழையை
பொழியவிட்டு,
பொங்கியெழுந்த
பெரு வெள்ளத்தில்
புரட்டி போட்டு இழுத்து சென்று

பகிரங்கமாக மண்ணில்
புதைத்து மக்களின் உயிரை
பறிப்பது முறையா?—நீ
பகவானா இல்லை
பகட்டுக்காரனா ?—உனக்கு
பரமனே, மனசாட்சியே இல்லையா?

எழுதியவர் : கோ. கணபதி. (24-Aug-23, 11:16 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 31

மேலே