சந்திரயான்
அன்று நிலவை காட்டி
குழந்தைகளுக்கு
சோறு ஊட்டி மகிழ்ந்தோம்
வருங்காலத்தில்
நிலவில் அமர்ந்து கொண்டு
பூமியை காட்டி
குழந்தைகளுக்கு
சோறு ஊட்டி மகிழும் காலம்
வெகு தூரமில்லை
விண்ணைத் தொட்டு
மகிழ இயலுமா..? .என்று
அன்று கேட்ட கேள்விக்கு
இயலும் என்று
இன்று
விண்வெளி விஞ்ஞானிகள் விடையளித்துள்ளார்கள்
விஞ்ஞானிகளை
வாழ்த்தி மகிழ்வோம்
வாழ்க பாரத தேசம்...!!
--கோவை சுபா