பாரதத்தின் சவுக்கடி

நிலவில் கால் பதிக்கும்
ஆசையை பகல் கனவென்று
பரிகசித்த பண்பு மிகுந்தவர்களே
பாரதம் கொடுத்து விட்டது
சவுக்கடி.....

மூவர்ணக் கொடியை நிலவினில்
பறக்கவிட்டு பாரதத்தின் பெருமையை
உலகுக்கு பறை சாற்றிய
விஞ்ஞாணிகளே விம்மித் தணிகிறது இதயம்.....

இன்றுநம் பாரதத்தின் பெருமை
பாரெல்லாம் பட்டொளிவீசிப் பறந்திட
பார்ப்பவர் விழிகள் பொருமிக்
காந்தும் பாரதத்தின் இமாலய
வளர்ச்சியில்....

விண்வெளி வீதியில் நாம்
கைவீசி நடக்கும் காலம்வெகு
தொலைவில் இல்லை - ஆம்
சிறகை விரித்து பகல்கனவு
காணுவோம்....

நிறைவேற்ற அக்னிச் சிறகுடன்
விஞ்ஞாணிகள் அநேகம் பாரதத்தில்
தலைநிமிர்ந்து செருக்குடன் நடந்திடு
பாரத தேசத்தில் நாமுமொரு
அங்கமென்று.....


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (23-Aug-23, 10:10 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 142

மேலே