ஆடவரே
வானழுவ தானமழை வாராது போனாலோ
தேனமுத மாகுவ தேயிலை - ஆனவரை
நாமழுவ தாயழுது நாடுயர மேகமே
தேமதுர மாகவிழு மோ
*
காடழி வாகுவதே காரண மாகிறதே
நாடழி வாகுவதோ நாளையே - ஆடவரே
மாமழை யேவர மாபலா வாழையோ
பூமர மோநடுவீ ரே
*
ஒன்றிலா வெண்பா
*
மெய்யன் நடராஜ்