சுந்தரி கண்ணால் ஒரு செய்தி

சுந்தரி கண்ணால் ஒரு செய்தி
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

மின்னலாகத் துடித்து
மின்சாரமாகத் தாக்குதடி

கண்ணிமையும் கண்விழியும்
காதுகளுக்கு எட்டாத

மெளன மொழியில்
மனதை தொட்டிடும்

சுந்தரிக் கண்ணால்
சொல்கிறச் செய்தியை

வாய்த் திறந்து
வார்த்தையாகச் சொல்லிவிடு

வாரி அணைக்கிறேன்
வளையலிட்டக் கைத்தொட்டு

சுட்டெரிக்கும் பார்வையில்
சூடேற்றும் சூனியக் காரிகையே

காதலை சொல்லாமல்
பார்வை புயலால்

தாக்காதே பூ மனம்
தாங்காது வாடி விழுமுன்

வாசந்தத்தை கண்டிட
வாய் திறவாய் சுந்தரியே

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (24-Aug-23, 5:31 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 98

மேலே