ஆற்றோடு ஆடுகின்ற அலையில் மகிழ்ந்தேநீ நீராட

காற்றோடு குழலாட காதல் நிலவோடு விழியாட
ஆற்றோடு ஆடும் அலையோடு மகிழ்ந்துநீ நீராட
ஆற்றின் கரையினுன் அழகை ரசித்த என்தூரிகை
மாற்றுக் குறையாபொன் மென்மேனி யைதீட்டி மகிழுதே

காற்றோடு குழலாட காதல் நிலவோடு விழியாட
ஆற்றோடு ஆடுகின்ற அலையில் மகிழ்ந்தேநீ நீராட
ஆற்றின்வெண் கரைதன்னில் அழகை ரசித்தயெந்தன் தூரிகையோ
மாற்றுக்கு றையாபொன் மேனி யைத்தீட்டி மகிழ்கிறதே

எழுதியவர் : கவின் சாரலன் (23-Aug-23, 5:21 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 41

மேலே